பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு, பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்; அவருடைய கோபாக்கினையின் மகாநாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள். வெளி 6:15:17

இன்றைய நாளிலே பெரிய விஞ்ஞானிகளும், உலகப் புகழ் பெற்ற கலைஞர்களும், சராசரி மக்களும், உண்மையான தேவனை அறியாதது போல வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். கல்லிலும், மண்ணிலும், விவேகமான தத்துவங்களிலும் தங்களுக்கென்று தெய்வங்களை உருவாக்கி, அவைகளை வணங்கி, ஆராதித்து வருகிறார்கள். இயேசுவை விசுவாசித்து, மனந்திரும்பி வாழும் விசுவாசிகளோ, இந்த உலக மக்களுக்கு உண்மை தெரியாது என்று எண்ணம்க் கொண்டு, அவர்களுக்கு சுவிஷேசத்தை அறிவிக்க வெவ்வேறு யுக்திகளை கைகொள்ளுகிறார்கள்.

Leave a comment

Trending