தீத்து2:11,12,13 யோவான்1:16
உம்மை நோக்கிப் பார்க்கும் போது
கிருபை பெருகுதைய்யா
நான் உம்மை நோக்கிப் பார்க்கும் போது
கிருபை வளருதைய்யா
கிருபையின் அதிபதியே
என் இயேசு ராஜனே
கிருபையின் அதிபதியே
எனக்காய் சிலுவை சுமந்தீரே(உம்மை)
தேவனோடு ஒப்புரவாக்கிய தேவ கிருபை
தேவபிள்ளை என்ற பெயரை
பெற்று தந்த கிருபை(உம்மை)
உந்தன் பூரணத்தாலே எனக்கு
கிருபை மேல் கிருபை
நான் அழிந்திடாமல் கடைசிவரைக்கும்
காக்கும் கிருபை(உம்மை)
உலக ஆசையை வெறுக்கச்
சொன்ன தேவ கிருபை
தேவன் மேலே பற்றாய் இருக்கச்
சொன்ன தேவ கிருபை(உம்மை)
மகிமை பிரசன்னத்தை எதிர் பார்க்க சொன்னதே நானும் ஆவலோடு அனுதினமும் காத்திருக்கின்றேன்