கொலோ3:3,சங்கீ71: ,1கொரி1:27,28
எனது ஜீவன் உமக்குள்ளே இயேசையா
பயமொன்றும் இல்லையே உலகிலே
மறதியின் பூமியிலே வாழ்கின்றேனையா
என்னை நினைத்துருகும் தெய்வம் என்றும் நீரையா
எனது மகிமை இரட்சிப்பும் உமக்குள் இருக்குதே
எனது பெலன் அடைக்கலமும் உமக்குள் இருக்குதே(எனது ஜீவன்)
பலவானை ஞானிகளை மறந்து விட்டீரே
ஞானமில்லா பேதையத்தான் தெரிந்து கொண்டீரே(எனது ஜீவன்)
எனது வாழ்வின் மேன்மையெல்லாம் நீர்தானைய்யா
தந்த கிருபை புகழ்ச்சியாக பாடுவேனைய்யா(எனது ஜீவன்)
எனது கருவை உந்தன் கண்கள் கண்டுபிடித்ததே
அது உருவேற்கும் நாட்களையும் மனதில் கொண்டீரே(எனது ஜீவன்)
முதிர்வயது மட்டும் என்னை கைவிடாதிரும்
உந்தன் சந்ததிக்கு சாட்சிகளை சொல்லும் வரைக்கும்(எனது ஜீவன்)
இரட்சிப்பின் வல்லமையை எனக்கு தந்தீரே
அது நித்தியமாய் எனக்குள்ளே ஊறச்செய்தீரே(எனது ஜீவன்)