1கொரிந்1:31,ஏசாயா64:6,யோவான்3:14,15

உம்மை நோக்கிப் பார்த்த போது
நான் பிழைத்துக் கொண்டேனைய்யா
நான் உம்மை நோக்கிப் பார்க்கும் போது
நான் பிழைத்துக் கொள்வேனைய்யா

எங்கள் நீதியெல்லாம் உந்தன் முன்னே
அழுக்கான கந்தை ஐயா
வெறும் அழுக்கான கந்தை ஐயா
எங்கள் நீதியாய் இருக்கின்ற
கர்த்தர் நீரல்லவோ(2)(உம்மை)

எங்கள் ஞானமெல்லாம் உந்தன் முன்னே
அஞ்ஞான மோகம் ஐயா
அது அஞ்ஞான மோகம் ஐயா
எங்கள் ஞானமாய் இருக்கின்ற
கர்த்தர் நீரல்லவோ
அதி ஞானமாய் இருக்கின்ற
கர்த்தர் நீரல்லவோ(உம்மை)

எங்கள் சிந்தையெல்லாம் உந்தன் முன்னே
கேடான சிந்தை ஐயா
வெறும் கேடான சிந்தை ஐயா
எங்கள் பரிசுத்தமான
கர்த்தர் நீரல்லவோ
மகா பரிசுத்தமான
கர்த்தர் நீரல்லவோ(உம்மை)