வெளி3:16,18 reve3:16,18
ஆபத்துக் காலத்தில் செவிகொடுத்து
அனுக்கிரக காலத்தில் உதவி செய்வீர்
பாடுவேன் புகழ்வேன் ஜெபித்திடுவேன்
நீர் தந்த ஆலோசனையின் படி
நெருப்பிலே புடமிட்ட பொன்னைத் தாரும்
நான் உடுத்திக் கொள்ள வெண்வஸ்திரம் தாரும்
பார்வையடைந்து உம்மை தரிசித்திட
கண்களுக்கு கலிக்கம் இன்று தாரும் {பாடுவேன்}
அனலாது குளிராது மாற்றுமையா
உந்தன் உண்மையுள்ள சாட்சியாய் மாறிடவே
அக்னியால் ஞானஸ்தானம் தந்திடுமையா
உந்தன் நாமம் என்னிலே மகிமை பெற (பாடுவேன்)