1 And when the day of Pentecost fully came, they were all with one accord in one place. பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
2 And suddenly there came a sound, from heaven as of a rushing mighty wind, and it filled all the house where they were sitting. அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
3 And there appeared unto them cloven tongues like as of fire, and it sat upon each of them. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது.
4 And they were all filled with the Holy Spirit and began to speak with other tongues, as the Spirit gave them the ability to speak. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
5 At this time, there were Jews dwelling in Jerusalem, devout men from every nation under heaven. வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்து வந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள்.
6 Now when this sound was heard, a crowd came together, and were confounded, because each one of them in the crowd was hearing them speak in their own language. அந்தச் சத்தம் உண்டானபோது. திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவர் அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.
7 And they were all amazed and marvelled, saying one to another, Behold, are not all these which speak Galilaeans? எல்லாரும் பிரமித்து ஆச்சரியபட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?
8 Then how can each of us hear them speak in our own language, wherein we were born? அப்படியிருக்க, நம்மில் அவ்ரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமெ, இதெப்படி?
9 Parthians, and Medes, and Elamites, and the dwellers in Mesopotamia, and in Judaea, and Cappadocia, in Pontus, and Asia, பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,
10  Phrygia, and Pamphylia, in Egypt, and in the parts of Libya about Cyrene, and strangers of Rome, Jews and proselytes,  பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவரிகளும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும்,
11 Cretes and Arabians, we do hear them speak in our languages the wonderful works of God கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.
12 And they were all amazed and were in doubt, saying one to another, What can this mean?  எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமொ என்று ஒருவரொடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
13 Others mocking said, These men are full of new wine. மற்றவர்ளோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள்.
14 But Peter, standing up with the eleven, lifted up his voice, and said unto them: You Jews, and all you who live in Jerusalem, let this be known to you and listen closely to my words. அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொவீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
 15