(எபேசி1:17, எபேசி3:16,17)
அனுக்கிரகம் தேடி ஓடி வந்தேன்
மெய் அருள் பாதம் நாடி ஓடி வந்தேன்
திருவாக்கு நிறைவாக வாருமையா
என் வினை தீர்த்து மறுவாழ்வு தாருமையா(அனுக்கிர)
மகிமையின் பிதாவை
நான் அறிந்து தொழுதிடனும்
கர்த்தர் இயேசுவை
நான் புரிந்து கொள்ளணும்(அனுக்கிர)
அறிவுக்கெட்டாத
உந்தன் அன்பை அறிந்திடனும்
புத்திக்கெட்டாத
ஜீவ ஆவியில் நிரம்பிடணும்(அனுக்கிர)
உள்ளான மனுஷனில்
உந்தன் ஆவியில் பலப்படனும்
கிறிஸ்து இயேசு தான்
என் உள்ளத்தில் வாழ்ந்திடனும்(அனுக்கிர)
எக்காள சத்தத்தை
நான் சீக்கிரம் கேட்டிடனும்
இராஜாதி ராஜாவின்
விண் சேனையில் சேர்ந்திடனும்(அனுக்கிர)